என் காதல்!!!

என்னைப் புன்னகைக்க வைத்தது என் காதல்
என்னைப் புதியதோர் மனிதனாக்கி வைத்தது என் காதல்

என்னை ஏங்க வைத்தது என் காதல்
என் தூக்கங்கள் கெடுத்தது என் காதல்


எனக்கு ஊக்கம் கொடுத்ததும் என் காதல்
உயிருள்ளதான சொர்க்கம் காட்டியதும் என் காதல்
என்னைச் சொக்க வைத்தது- மகிழ்ச்சியில்

ஓர் கணம் நினைத்தேன்
உலகில் அழகியதொரு விஷயம் காதல் என்று

மறுகணம் கண்டேன் உண்மை
உலகில் மிக அழகிய விஷம் தான் காதல் என்று...

உண்மைதான்- அது
என் நெஞ்சை அறுத்துப் போட்டது
தன் கூரிய வார்த்தைக் கத்திகளாலும் பார்வை ஈட்டிகளாலும்

சிதறிய நெஞ்சத்துள் சிறு சிறு துண்டுகளாய்
சிதறிக்கிடக்குதடி உன் ஞாபகச்சிறுமணிகள்!!!

உன் ஆசைக்காதலன்
Get this gadget at facebook popup like box