காதல் உறவுகளை உடைத்து

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!


கண்டதும் காதல்

முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!

காதல் ஏக்கம்

உன் வியர்வை நாற்றம் கூட
எனக்கு சுகம் தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!!

ஒருதலைக் காதல்

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லைஉன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது...!

நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..
என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு ...
Get this gadget at facebook popup like box