காதலின் நிறம்!

காதலின் நிறம் என்ன?
வெள்ளை??
துய்மையான அன்பை மட்டும் கொண்டதால்
காதலின் நிறம் வெள்ளையோ?!
நீலம்??
அளக்கமுடியா ஆகாயம் போல் அன்பைகொள்வதால்
காதலின் நிறம் நீலமோ?!

பச்சை??
என்றென்றும் பசுமையான நினைவுகளையுடையதால்
காதலின் நிறம் பச்சையோ?!

மஞ்சள்??
தெய்விகத்தன்மைதனை தன்னகத்தே கொண்டதால்,
காதலின் நிறம் மஞ்சளோ?!

சிவப்பு??
இரத்தத்தின் ஒவ்வொரு சிவப்பு அனுவிலும் வாழ்வதால்
காதலின் நிறம் சிவப்போ?!

கருப்பு??
கருங்கூந்தலைப்போல் என்றும் உணர்வுகள் இளமையாயிருப்பதால்
காதலின் நிறம் கருப்போ?!

வானவில் போல்,
ஏழு வர்ணம் கலந்த அதிசய
கலவையா காதல்?!

காதலுக்கு நிறமில்லையா?
யார் சொன்னது??
ஒவ்வொரு நிறத்திலும் காதலின் குணமுள்ளது;
ஒவ்வொரு நிறத்திலும் காதலின் மனமுள்ளது;
காதலுக்கு நிறமில்லையென்று எப்படி சொல்வது?!

காதலின் நிறம் என்ன....??
எனக்கு தெரியவில்லை,உனக்கு தெரியுமா,
Get this gadget at facebook popup like box