முத்தம்...

மூச்சு முட்டுதடி -
நாடி துடிக்கவில்லை -
நொடிக்கொரு முத்தம் வைக்காதே...
அழகே,
மிச்சம் வை -
கொஞ்சம் மட்டுமே மிச்சம் வை -
நான் உயிர்த்தெழ தேவைப்படும்...
பின், மீண்டும்...
மூச்சு முட்டுதடி...!!!

*
உன் உதட்டில்
இருப்பதென்னடி?
என்னை உயிர்பிக்கவும்
செய்கிறது -
என் உயிர் பிரிக்கவும்
செய்கிறதே...
*
உன் முத்தங்கள்
என் உணவாகின்றன -
பட்டினி இடாதே -
ஒரு பொழுதும்...
*
முத்தங்களை காற்றில் விடாதே...
வேறு யாரேனும் அதை
சுவாசித்துவிடப் போகிறார்கள்...
Get this gadget at facebook popup like box