பெண்களை ஆண்கள் ஏமாற்றுவதற்கான காரணங்கள்...

ஆண்கள் தங்களின் மனைவியோ அல்லது பெண் துணை ஆகியவர்கள் தவிர வேறு பெண்கள் மூலம் செக்ஸ் உறவுக்கு தூண்டப்பட்டால் அவர்களால் மறுக்க முடிவதில்லை.
ஆண்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர் என்ற பார்வையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறைந்த கட்டுப்பாடு உள்ளவர்கள் இவ்வாறு செய்கின்றனர் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் இவர்களிடையே உள்ள அதிக பாலியல் உந்துதலால் இவ்வாறு நடக்கின்றது என்று கூறியுள்ளனர். எந்த வகை அறிவியல் பூர்வமான காரணமாய் இருந்தாலும், ஆண்கள் தங்கள் துணைவரை ஏமாற்றுவதற்கு பல காரணங்களை கண்டறிந்துள்ளனர். அவர்களின் இயற்கையான இயல்பினாலும், மிகுந்த மகிழ்ச்சியை தருவதாலும் இத்தகைய தவறான காரியங்களில் ஆண்கள் ஈடுபடுகின்றனர்.

ஆண்கள் துரோகம் செய்வதற்கு பல காரணங்கள் உண்டு. இத்தகைய செயல் சில சமயம் அவர்களது துணைவரால் வரலாம். இருவருக்கிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்ல முனைவார்கள். இந்தியாவை போல் உள்ள பழமையும் கலாச்சாரமும் உள்ள நாட்டில், பெற்றோர்களால் பார்த்து பார்த்து நடத்தப்படும் திருமணம் ஒரு வேளை இருவருக்கும் புரிதலை ஏற்படுத்தாவிடில் இத்தகைய தவறுகள் நேரலாம்.


இத்தகைய திருமணங்களில் பொதுவாக எந்த வித ஒற்றுமை தரும் விஷயங்கள் இருவரிடையே இல்லாமல் போனால் ஆண்களுக்கு பிடிப்பதில்லை ஆதலால் தவறிழைக்கின்றார்கள். சில சமயங்களில் துணைவர்கள் இருவருக்கும் அவர்களின் பந்தத்தில் ஆர்வம் இல்லாமல் போய் விடுகின்றது. எனவே இருவரும் தவறு செய்ய முனைகிறார்கள். திருமண வாழ்வில் சலிப்பு ஏற்பட்டதன் காரணமாக இத்தகைய காரியங்களை செய்வதாக பல ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணமானதும் ஏற்படும் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை கடந்த பின்பு சோதனை காலம் ஒன்று வரும். இந்த சமயங்களில் இருவரும் தளர்ந்து விடாமல் ஆர்வத்துடன் ஏதேனும் புதிதாக பாலியல் ரீதியாக முயற்சி செய்ய வேண்டும். வாழ்வில் இத்தகைய புதிய முயற்சிகள் செய்து கொண்டு இருந்தால் ஆண்கள் தவறு செய்வதை தவிர்க்க முடியும்.

உறவில் விரிசல் 

சண்டைகளும், விவாதங்களும் ஒரு நல்ல உறவின் சாராம்சமாகும். ஆனால் அவைகளை சரியான விதத்தில் கையாளாவிட்டால் உறவில் முறிவை ஏற்படுத்தும். இதனால் ஆண்கள் துரோகம் செய்ய முற்படுகிறார்கள்.

புதுமையான முறைகளை கையாளுதல் 

எந்த ஒரு உறவின் துவக்கமானாலும் அதில் அதிக அளவு மகிழ்ச்சி நிச்சயம் இருக்கும். அது புதிதாவும் சந்தோஷமூட்டுவதாவும் இருப்பதால் துவக்கம் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இருவரும் எந்த ஒரு புதிய முயற்சியோ அல்லது வித்தியாசமாக எதையும் செய்யவோ முயற்சிக்காவிடில் உறவில் ஒரு விதமான வெறுப்பும், சலிப்பும் ஏற்படும். இது வேறு ஒருவரை தேடி செல்ல தூண்டுகோலாக இருக்கும்.

ஆராய்ச்சி செய்தல் 

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்ளும் ஆண்கள் பொதுவாக புதிதாகவும், ஆராய்ச்சிகளையும் பாலியல் ரீதியாக செய்ய ஆசைப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஆனால் இத்தகைய ஒத்திகைகளை அல்லது ஆராய்ச்சிகளை தங்கள் துணையுடன் முயற்சி செய்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

தீராத காம பசி

சில ஆண்களுக்கு இந்த விஷயத்தில் மன திருப்தியே இருக்காது. அவர்களின் துணைவரிடம் இன்னும் எதிர்பார்க்கும் நிலை ஏற்படுகின்றது. இச்சமயத்தில் மேலும் திருப்தி பெரும் வண்ணம் பெண்களை ஏமாற்றும் தன்மை வந்து விடுகின்றது.

பழி வாங்குதல் 

பல ஆண்கள் பெண்களை பழிதீர்க்கும் வண்ணம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, அவர்களின் ஆசையை தீர்த்துக் கொள்கின்றனர்.

உற்சாகம் 

துணைவரை ஏமாற்றுவது நமது கலாச்சாரத்தில் அனுமதிக்கப்படாத ஒன்று. இத்தகைய விதிமுறைகளை உடைப்பதற்காகவே சிலர் பாலியல் சம்மந்த காரியங்களை முறையற்ற வகையில் செய்து மகிழ்ச்சி காண்கின்றனர்.

வாய்ப்பு 

வேலை செய்யும் இடங்களில் கவர்ச்சியான பெண்கள் உள்ள துறையில் ஆண்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. அவர்களது வாழ்க்கை முறையில் இத்தகைய பெண்களை சந்திப்பது கட்டாயமான விஷயமாக அமைகின்றது. இந்த தருணத்தில் எந்த ஒரு கவர்ச்சியூட்டுகின்ற காரியமும் வாய்ப்புகளும் கிடைக்கும் போது அவர்களால் வேண்டாம் என்று கூற முடியாது.

இனி காதல் இல்லை 

உறவுகளுக்குள் இன்பம் இல்லாத காரணத்தால் தான் உறவில் முறிவும், ஏமாற்றும் எண்ணமும் ஏற்படுகின்றது. ஒருவருக்கொருவர் புரிந்து திருமணம் செய்திருந்தால், இத்தகைய சிரமங்களை தவிர்க்க முடியும்.

மூடி மறைப்பது 

திருமணம் செய்த பெண்ணை காதலித்தாலும் வேறு ஒரு பெண்ணுடன் தவறு செய்ய ஆண்கள் முற்படுகிறார்கள். இவ்வாறு செய்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் மூடி மறைத்து விட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

தொடர்ந்து ஏங்குதல் 

தங்களுடைய மனைவிக்கு தாங்கள் தேவையில்லை என்று உணரும் ஆண்கள், வேறு சில பெண்களை கவனிக்கத் துவங்குகின்றனர். இவர்கள் தங்களை புரிந்து கொள்பவர்களாகவும் மற்றும் தங்களை தனிச் சிறப்பானவர்களாகவும் நினைக்கும் பெண்கள் என்று ஆண்கள் நினைப்பார்கள்.

No comments:

Get this gadget at facebook popup like box