உங்களை நேசிக்காதவரை நீங்களும் நேசிக்காமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டியவை...!

மனதிற்கு மகிழ்ச்சியை தரும் காதல் என்கிற உணர்வு, காதலில் சில பிரச்சனைகள் ஏற்படும் போது வேதனையையும் தருகிறது.
பிரச்சனை தீர்ந்து மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டால் சரி, மாறாக அந்த பிரச்சனை அதிகமாகி உறவினை இழக்கும்போது ஏற்படும் வலி அதிகம். அந்த வலியிலிருந்து வெளிவரும் வழிகள் குறித்து காண்போம். ஒருவரது உறவினை இழந்ததினால் இதயம் நொறுங்கியுள்ளவர், தம்மை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்தத, தெரிந்து கொள்ள வேண்டிய வழிகள், அவரது வாழ்வை மேற்கொண்டு நகர்த்த அவருக்கு உதவும்.தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கவில்லை என்று தெரிவித்துவிட்ட பின்னும் கூட அவர் மீது ஆழமான காதலை கொண்டிருப்பது ஒருவரது வாழ்வில் வலி ஏற்படுத்த கூடிய தருணங்களில் ஒன்று.

காதலர் தன் முடிவை தெரிவிக்கும் முன், தான் அதிகமாக அவரை நேசித்த காரணத்தினால் அவரது இந்த பண்பற்ற கொடூரமான முடிவு, மிகுந்த அதிர்ச்சியை தரும்.அவரது முடிவினை மதிப்பதே சிறந்த ஒன்றாகும். மேலும் தன்னை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்தி, அவரது எதிர்காலம் குறித்து சிந்தித்து செயல்பட இந்த குறிப்புகள் உதவும்.


காலம் கடக்க வேண்டும் 


இந்த நிலையில் அவரது இதயமும், புத்தியும் ஒன்றுடன் ஒன்று போரில் ஈடுபட்டிருக்கும்.அவர் இன்னும் தனது காதலருடனான காதலில் இருந்து மீண்டு வராத நிலையில், அவர்களது காதலின் மகிழ்ச்சிகரமான நாட்களை அவரது இதயம் மீண்டும் எண்ணி பார்க்கும். மேலும் தற்போதும் முன்பு போல அனைத்தும் சரியாகி மகிழ்ச்சியாக முடியும் என்று அவர் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வார். மறுபுறம் அவரது புத்தி, காதலரது உணர்வுகள் முழுவதும் மாறிவிட்டது என்றும், இனி தன்னால் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை என்று அவருக்கு உணர்த்தும். நிகழ்ந்த உண்மையை உணர்ந்து அவரது இதயமும் புத்தியும் ஒன்றுக்கு ஒன்று சீரமைப்பு பெற அவருக்கு சற்று காலம் ஆகும். இவ்வாறு இதயம் உடைந்து போய் உள்ளவருக்கு, நேரம் கொடுங்கள் என்பது தான் தம்மை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்த சொல்லப்படகூடிய வழிகளுள் சிறப்பானது.


இழப்பிற்காக வருந்துங்கள் 

உறவினை இழந்ததினால் ஏற்படும் துக்கத்தினை அனுமதிக்க வேண்டும். உறவு முறிவிற்கு பின் கோபம், குழப்பம், வருத்தம், நம்பிக்கை துரோகம் போன்ற உணர்வுகள் சாதாரணமானது தான். இந்த உணர்வுகளை அவர் கடந்து வரும் போது தன் மீது மற்றொருவர் அளவு கடந்த காதல் கொள்ள, தான் தகுதியானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் தன்னுடன் இணைந்திருக்கவில்லையே என்று வருந்துவதை விட அவர் தன் உறவினை முறித்து கொண்டதே மேலானது என்று கருத வேண்டும்.



சமூகத்துடன் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் 

வருந்துவதற்கு நேரம் கொடுத்த பின் செய்ய வேண்டியது யாதெனில், தன்னை சுற்றியுள்ள மற்ற உறவுகளுடன் இணைந்து பழக வேண்டும். பொதுவாக உறவு முறிந்த பின் அவர் தன் வீட்டில் தனியாக அமர்ந்து தன் எண்ணத்தினை குறித்து சிந்திக்க மட்டுமே அதிகம் விரும்புவார். தனியாக அதிக நேரம் செலவிட்டு முன்னாள் காதலரை குறித்து அதிகம் சிந்திக்கும் போது அவருக்குள் உன்னை தவற விட்டு விட்டேன் என்ற எண்ணம் மட்டுமே உருவாகும். மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இந்த உணர்வுகளிலிருந்து வெளிவர அவரை சுற்றியுள்ள மக்களுடன் கலந்து பழகி வாழ வேண்டும்.



உங்களுக்கான இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் 


காதலை இழந்து மன வேதனையில் உள்ளவர், தன் வாழ்வு ஒளிர்வதற்குப் புதிதாக சில இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். புதிய மொழி கற்பது, புதிய கார் வாங்குவது, நாட்டின் மற்றொரு பகுதிக்கு சுற்றுலா செல்வது, தொழில் அல்லது வேலையை முற்றிலும் புதிதாக்கி கொள்வது போன்ற புதிய இலக்குகளை அமைத்து கொள்ள வேண்டும். இந்த இலக்குகளை அடைவதற்கு தான் மேற்கொள்ள போகும் முயற்சிகள் குறித்து திட்டமிட வேண்டும். இப்போது அவர் தனியாக உள்ளார் என்பதையும், தான் விரும்பியபடி தன் வாழ்வினை அமைத்து கொள்ள நிறைய காலம் உள்ளது என்பதையும் உணர வேண்டும்.


தொடர்பு கொள்வதை நிறுத்துங்கள் 


காதலை இழந்தவர் தனது முன்னாள் காதலர் குறித்த எந்த ஒரு தொடர்பையும் தவிர்க்க வேண்டும். சமூக வலை தளங்களிலிருந்து அவரை நீக்க வேண்டும். எனவே காதலரை குறித்தும் அவர் வாழ்வின் சமீபத்திய செய்திகள் எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் போகும். அவர் தற்போது யாருடன் வெளியில் செல்கிறார் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவராயினும், அதை தெரிந்து கொள்வது அவரை மேலும் உணர்ச்சிவசபட்டவராக்கி அவரது உடல் நிலையை பாதிக்கும். ஈ-மெயில், செல்போன் ஆகியவற்றிலிருந்து காதலர் குறித்த தகவல்களை நீக்குவது, அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை அகற்றும்.


உணர்வு தூண்டுதல்களை நீக்குங்கள் 


தான் மிகவும் நேசித்த காதலரையும், அவர் உறவு குறித்த நினைவுகளை தூண்டக்கூடிய விஷயங்களை நீக்க வேண்டும். எனவே அவர் தனது காதலரின் பழைய மின்னஞ்சல், இருவரது படங்கள், குரல் அஞ்சல் மற்றும் உரை செய்திகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். காதலில் இருந்த போது நிகழ்ந்திருந்த பழைய மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து ஆழ்ந்து யோசிப்பது எந்த அளவிற்கு மகிழ்ச்சியான ஒன்றோ அதே அளவிற்கு சுயசித்திரவதையானதும் கூட. இது அவர் தன் வேதனையிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் பின்னடைவாக அமையும்.


மீண்டும் வெளியில் செல்ல முயலுங்கள் 


தனது பழைய காதலர் குறித்த நினைவுகளிலிருந்து முழுவதும் வெளி வராத நிலையிலும் மீண்டும் வெளியில் செல்ல முயல வேண்டும். சிரமம் மேற்கொண்டு தன் காதலருக்கு பதிலீடாக வேறொருவரை கண்டு பிடிப்பதை நோக்கமாக கொள்ளாமல் மற்றொருவரின் துணையில் மகிழ்ச்சி கொள்வதை இலக்காக கொள்ள வேண்டும். கவலைகளிலிருந்து வெளி வரும் முயற்சியில், தனக்கான சரியான நபரை சந்திக்கும் வரை, சில அற்புதமான மக்களை சந்திக்க இது வாய்ப்பாக அமையும் அல்லது வேறு ஒரு ஒருவருடன் உறவினை உருவாக்கி கொள்வதை விட தனியாக இருப்பதே சிறந்தது என்ற முடிவிற்கும் வரக்கூடும்.

No comments:


Get this gadget at facebook popup like box