முதல் பார்வையில் காதல்: உண்மையா அல்லது பொய்யா?

காதல் என்றால் என்ன? நம் ஒவ்வொருவரிடமும் அதற்கு ஒவ்வொரு மாதிரியான விளக்கம் இருக்கும். அதை தவறு என சொல்ல முடியாது. நம் ஒவ்வொருவரின் அனுபவங்களை பொறுத்து நம்மிடையே அது பதிந்திருக்கும். அதனால் காதலுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தங்களை கூறுவார்கள்.அதன் மீது நமக்கு உண்டான அனுபவங்களே அதனை தீர்மானிக்கும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி - காதல் என்பது நம் அனைவரையும் இறக்கை இல்லாமலேயே வானில் பறக்க வைக்கும்; வானம் மேலும் நீலமாகும், புற்கள் மேலும் பச்சையாகும், காற்று ஒரு சங்கீதமாய் உங்கள் காதில் ஒலிக்கும், மழைத் துளிகள் ஒரு புது மெல்லிசையை உருவாக்கும், அனைத்து திசைகளில் இருந்தும் சந்தோஷங்கள் பொங்கி வரும்.

நீங்கள் காதலில் இருப்பதை உணரும் போது, அந்த உணர்ச்சி ரீதியான தருணத்தில், இவையனைத்துமே ஒரு நொடிப்பொழுதில் நடந்து விடும். ஆனால் இவையனைத்துமே முதல் பார்வையில் ஏற்படும் காதலினால் வருமா? முதல் பார்வையில் ஏற்படும் காதல் உண்மையா பொய்யா? நீங்கள் ஒருவரை பார்த்த முதல் முறையே அவர் மீது காதல் ஏற்படும் என்பதை உறுதியாக கூறுவது கடினமான ஒன்றாகும்.

முதல் முறை ஒருவரை பார்த்து அவரிடம் நம்மக்கு இவ்வகையான உணர்வு ஏற்பட்டால், அது பெரும்பாலும் ஒரு வகையான ஈர்ப்பு மட்டுமே. முதலில் அவரின் தோற்றத்தின் மீதே நமக்கு ஈர்ப்பு உண்டாகிறது. காதல் என்பது தோற்றத்தையும் மீறிய ஒன்றாகும். வெறுமனே ஒருவரின் தோற்றத்தை மட்டுமே பார்த்து அவரிடம் காதலை சொல்வது சிறந்த யோசனை கிடையாது.

ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளது. அவைகளை தெரிந்து கொண்டு, மீதமுள்ள நம் வாழ்க்கை முழுவதையும் அவருடன் சேர்ந்து நம்மால் வாழ முடியுமா என்பதை முடிவெடுக்க நேரம் தேவைப்படும். இதையெல்லாம் மறந்து முதல் பார்வையிலேயே காதலை சொல்ல முடிவெடுத்தால், வருங்காலத்தில் வரப்போகும் பிரச்சனைகளை சந்திக்க நாம் தயாராக வேண்டி வரும்.

முதல் பார்வையில் காதல் கொள்வதில் பல நன்மைகளும் உண்டு, அதே போல் பல தீமைகளும் உண்டு. முதல் பார்வையில் உண்டாகும் காதலினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், அது உண்மையா பொய்யா என்ற சில விவாதங்களைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

காம மயக்கம் நாம் முதன் முதலில் ஒருவரை பார்க்கும் போது நம்மை முதலில் ஈர்ப்பது அவரின் தோற்றமாக தான் இருக்கும். அவருடைய குணத்தை பற்றி எதுவும் தெரியாத நிலையில் அவரின் தோற்றத்தினால் மட்டுமே நாம் அவர் மீது ஈர்ப்பை பெறுவோம்.

வெறும் உடல் ரீதியான தோற்றத்தின் மீது காதலில் விழுவதை ஈர்ப்பு அல்லது காம மயக்கம் என்று தான் கூற முடியும். காதல் என்பது அவ்வளவு சுலபத்தில் நடந்து விடாது. காதல் என்ற உண்மையான உணர்வு வளர்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும்.

இருவருக்கும் அந்த உணர்வு ஏற்பட வேண்டிய அவசியமில்லை நீங்கள் ஒருவரை பார்த்தவுடன் அவர் மீது ஈர்ப்படையலாம். அவருடன் காதல் என்ற உறவில் ஈடுபடவும் விரும்பலாம்.

ஆனால் அவரிடமும் அதே உணர்வு உள்ளதா என்பதை உங்களால் உறுதியாக கூற முடியுமா? இரண்டு பேருக்கும் அந்த உணர்வு ஏற்பட்டால் தானே உங்கள் உணர்வுக்கு அர்த்தம் ஏற்படும்.

அந்த நபரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது நீங்கள் காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? உண்மையை சொல்லப்போனால், உங்களுக்கு ஒன்றுமே தெரியாது.

அவ்வகையான சூழ்நிலைகளில், அந்த நபரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? முதலில் அந்த நபரை புரிந்து கொள்ள வேண்டும். அவர் மீது உண்மையான காதல் ஏற்பட வேண்டும் என்றால் அவரின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

No comments:

Get this gadget at facebook popup like box