முதன்முதல் உன்னை கனவு காண ஆரம்பித்தேன்!

உன் தோழியின் கல்யாணவீட்டில் தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான் எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய

*

உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*

நான் முதல்த் தடவை பயணித்த
விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன்முதல்
உன்னை கனவு காண ஆரம்பித்தேன்

*

வருசையில் நின்று வாங்கப் போன
மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*

உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*

தன் பெயரை பிழையாக எழுதிக் கொண்டிருந்த
சிறுமியிடம் அழகாய் எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும் அது என்பதால்
Get this gadget at facebook popup like box