பிரிவு

ஏன் அழுகின்றாய்
நாங்கள்
பிரியாமல் இருப்பதற்கு
ஒன்றும்
ஓவியக் காதலர்கள் அல்ல
பிரிவின் துயரில்தான்
காதலை வென்றெடுப்பதற்கான
கட்டிடம் கட்டபப்டும்
பிரிவிற்கான சேர்வை தீவிரப்படுத்தும்
விடும் கண்ணீருக்கான

விடையை விரயபப்டுத்தும்
அன்பே
கலங்காதே
மொத்தத்தில்
நமது பிரிவு
தற்காலிகமானதுதான்
   
 
எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா


திவி செல்வராசு
ப்ரான்சு
Get this gadget at facebook popup like box