காதலியிடம் காதலைச் சொல்ல எதற்கு தயக்கம்?

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் காதல் மனதில் கண்டிப்பாக மலரும். அவ்வாறு காதல் மலரும் போது, அந்த காதலை சொல்ல முடியாமல் தவிப்போரின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் காதலை அதிகம் முதலில் வெளிப்படுத்துபவர்கள், ஆண்களே!
அவ்வாறு காதல் மனதில் காதல் வந்து அந்த காதலை சிலருக்கு எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு தவிக்கும் நம் காதல் மன்னன்களுக்கு, எப்போது, எப்படி காதலை சொன்னால் காதல் வெற்றியடையும் என்று ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அந்த டிப்ஸ்-ஐ படித்துப் பார்த்து, பின்னர் சொல்லுங்களேன்...

* முதலில் காதலை காதலியிடம் சொல்லும் போது, காதலியின் குணத்தை நன்கு தெரிந்து கொண்டு, பின்னர் சொல்லச் செல்ல வேண்டும்.
* பின்பு எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ஒத்திகைப் பார்ப்பது மிகவும் சிறந்தது. ஏனேனில் முதலில் எப்படி பேசுகிறோமோ, அது தான் கடைசி வரையில் அவர்களது மனதில் இருக்கும். ஆகவே இதனை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வெளிப்படுத்துங்கள்.

* அதிலும் பெண்கள் எந்த டென்சனும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் நேரத்தில், உங்கள் காதலை தெரிவித்தால், அப்போது தான் உங்கள் அன்பு காதலாக மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் அவர்கள் உங்களுடன் எப்போது பேச விரும்புகிறார்களோ, அப்போது சொன்னால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும் வாய்ப்புகள் அதிகம்.

* முக்கியமாக பெண்களுக்கு, தங்களை பற்றி மிகவும் வர்ணித்து, பாராட்டி பேசினால் மிகவும் பிடிக்கும். ஆகவே அவர்களிடம் பேசும் போது, நேராக காதலை சொல்லாமல், சற்று அவர்கள் சந்தோஷப்படும் வகையில் சிலவற்றை சொல்லி, பின்னர் காதலை சொன்னால் அந்த சந்தோஷத்தில் அவர்கள் உங்கள் காதலை ஏற்க வாய்ப்புக்கள் உள்ளது. அதற்காக அனைத்துப் பெண்களையும் அப்படி சொல்ல முடியாது, அது ஒவ்வொருவர் குணத்தைப் பொறுத்தது.

* அனைத்துப் பெண்களுக்கும் மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே காதலை சொல்லும் போது, ஒரு மலர் கொத்துக்களை வாங்கிக் கொண்டு, அவர்களிடம் கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம்.

* பெண்களுக்கு எப்போதும் மறைமுகமாக பேசினால் பிடிக்காது. ஆகவே எப்போதும் காதலை சொல்லச் செல்லும் போது, அவர்களிடம் மொக்கை போடாமல், நேரடியாக காதல் செய்வது சம்பந்தமாக மட்டும் பேசி, காதலை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அந்த மொக்கையிலேயே அந்த காதல் தோல்வியில் முடிந்துவிடும்.

* உங்களுடன் மிகுந்த நட்போடு பழகும் பெண்களாக இருந்தால், அவர்கள் உங்களிடம் காதலை வெளிப்படுத்தாமல், உங்கள் மீது அதிக உரிமையோடு, தேவையில்லாத காரணத்திற்கெல்லாம் சண்டை போடுபவராக இருந்தால், அப்போது அவர்கள் உங்களை காதலிக்கிறார், ஆனால் காதலை சொல்ல தயங்குகிறார் என்பதைப் புரிந்து, அந்த நேரத்தில் உங்களிடம் இருக்கும் காதலை வெளிப்படுத்தலாம். (முக்கியமாக காதல் செய்கிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் இவ்வாறு செய்ய வேண்டும்.

* மேற்கூறிய அனைத்தையும் விட முக்கியமானவை, காதலை தெரிவிக்கும் போது உங்கள் பேச்சு, பாவனை அனைத்துமே, அவர்கள் மீது இருக்கும் அன்பை காட்டும் வகையில் இருக்க வேண்டும். உங்களுக்கு காதலியிடம் தனியாக பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது, சற்றும் தயங்காமல், மனதில் இருக்கும் அனைத்தையும் அன்போடு சொல்லிவிட்டால், அப்போதே காதலுக்கான பதில் தெரிந்துவிடும்.

ஆகவே நண்பர்களே! காதலைச் சொல்லும் போது மேலே சொன்ன அனைத்தையும் மனதில் கொண்டு, பின்னர் அதற்கு ஏற்றாற்போல் நடந்தால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும். ஆகவே "சொல்லத் தான் நினைக்கிறேன்...சொல்லாமல் தவிக்கிறேன்...காதல் சுகமானது..." என்று இல்லாமல், காதலை சொல்லுங்க... காதல் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க...
Get this gadget at facebook popup like box