காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?

உன்பார்வை என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி
என் இதயத்தை ரணகளமாக்கிவிட்டது
உன் முதல் பார்வையிலேயே அப்படியே
ஷாக் ஆயிட்டேண்டி கண்ணே


உன் நினைவு என்னை ஏன்
இரவும் பகலும் இடைவிடாது
ரவுண்டி கட்டித் தாக்குகிறது
ரெம்ப வலிக்குது அழுதுடுவேன்.

உனக்கு நான் ரூம் போட யோசிக்கையிலே
எனக்கு ஆப்பு வைப்பது எப்படி யென்று
நீ ரூம் போட்டு பிளான் பண்ணி
என்னை ஏன் கவிழ்த்தாயடி

என்ன வேணும் உனக்கென்றால் உன்னை
எண்ண வேணும் என்றும் என் பேனே.
வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது
ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன்.

கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே
நீ என்னை வேண்டாமெனச் சொன்னது போன வாரம்தான்
ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன்.
வேண்டாம் என்பாயா மீண்டும்.

எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும்
மீண்டும் மீண்டும் உனை நாடி வரும்
ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா?
ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறமாதிரி

நீதான் என்னவள் என்பது தான்
எந்தன் "ஜட்ஜ்மென்ர்"
அது தான் என்றும் சரி
ஏற்றுக் கொள்வாயடி

என்பட்டுக்கு சிவனே என்று
போய்க்கிட்டிருந்த என்னை
வருத்தப்படும் வாலிபர் சங்கத்தில்
ஏன் இணைத்தாய்?

எதையும் பிளான் பண்ணுபவன்
இதையும் பிளான்தான் பண்ணினேன்
பில்டிங் வீக் பேஸ்மென்ற் ஸ்ராங்
ஐய்யா வாங்க அம்ம வாங்க

கனவுச் சந்தில் என்னை ஏன் கும்மி எடுத்தாய்
நினைவுத் தொட்டியில் ஏன் இந்த சித்திரவதை
ஏன் இந்தக் குண்டக்க மண்டக்க என்னொடு.
போடாங் கொய்யாலே .......

ஒரு மனுசன் எதையாவது பண்ணி
முன்னுக்கு வரப் பார்த்தால்
கால் வைக்கும் இடமெல்லாம்
கண்ணி வெடிகளாய் கன்னி விழிகளடி

சந்தையில் அயிர மீனுண்டு நெத்தலி மீனுண்டு
கெளித்து மீனுண்டு கெண்டை மீனுண்டு
உன் மனச் சிறையில் இருந்து என்னை மீட்க
ஜாமீன் மட்டும் இல்லையடி கண்ணே


நேரில் வந்து செய்த சித்திரவதை போதாதா
கனவிலும் வந்து ஏன் இந்த கொடுமை
பயபுள்ள ஏண்டி இந்த எடக்கு மடக்கு
என்னை உனை எண்ணி ஏங்க வைப்பது ஏன்
என்னை வைத்து காமேடி கீமேடி பண்ணவா?
Get this gadget at facebook popup like box