காதல் என்பது!

காதல் என்பது என்றைக்கும் தளராதது

காதல் என்பது அன்பிலே உருவானது

காதல் என்பது இதயத்தில் பதிவாவதுகாதல் என்பது உண்மையின் துணையானது

காதல் என்பது நன்மையில் நிலையானது

காதல் என்பது தூய்மையின் ஊற்றானதுகாதல் என்பது உடலிலும் உள்ளத்திலும் இன்பத்தை உருவாக்குவது

காதல் என்பது கடமையை நினைவூட்டுவது

காதல் என்பது எளிமையை ஏற்க வைப்பது

காதல் என்பது போலித்தனத்தைப் போக்கடிப்பது

காதல் என்பது ஐயத்துக் கிடமே இல்லாதது

காதல் என்பது எந்தப் பளுவையும் ஏற்கத் துணிவது

காதல் என்பது இதய பாசத்தின் இருப்பிடமானது

காதல் என்பது மனத்தூய்மையால் மட்டுமே சாகாமல் வாழ்வது

காதல் என்பது காலத்தை வெல்வது

காதல் என்பது கடவுளின் படைப்பின் ஊற்றுப் பணி

காதல் என்பது கட்டுப்பா டுள்ளது

காதல் என்பது கவலையையும் மகிழ்ச்சியாய் மாற்றித் திகழ்வது

காதல் என்பது உயிர்களின் இயக்கத்தின் அடிப்படையானது

காதல் என்பது பொய்யை அறவே விரட்டி நிற்பது

காதல் என்பது இருவர் இணைந்து தாங்கித் தூக்கி உயர்வதற்குதவுவது

காதல் என்பது இன்றைக்கும் இளமையாய் இதயத்தில் வதிவது

காதல் என்பது தித்திக்கும் இனிப்பாய் இறுதிவரை தொடர்வது

காதல் என்பது இன்பமும் துன்பமும் ஒன்றேயென்று உணர்த்துவது
Get this gadget at facebook popup like box