நீ எனக்காக விட்டு சென்றவை அழகான தோல்விகள்.. .

நீ எனக்காக விட்டு சென்றவை
அழகான தோல்விகள்,
சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்,
முரண்பாடான உணர்வுகள்,
மெல்லிய உன் புன்னகை,


என்னோடான உன் பயணங்கள்,
நலம் விசாரிப்புகள்,
எனக்கான உன் கண்ணீர்,


விரும்பிய இதயம்,
உன் முதல் ஸ்பரிசம்,
உன்னுடன்
கடந்து சென்ற தூரங்கள்,
நனைந்த முதல் மழை,
என்றும் அழியாத நினைவுகள்,
மறக்கவில்லை எதையும்
இவைகளோடு காத்திருக்கிறேன்

இன்றும்.........உனக்காக..!
Get this gadget at facebook popup like box