காதலின் ஏமாற்றம்...!!!

காலத்தின் கோலம் என்பதை விட
காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்
நாம் சேர்ந்தது காலத்தின் கோலம்
நம் பிரிவு இறைவனால் எழுதி
கட்டாயமாக்கப்பட்டு விட்டது

இனியும் நீ எனக்கா? கிடைப்பாயா? சேர்வோமா?
சந்தோசமாய் வாழ்வோமா?
இவை கேள்விகள் அல்ல,
என் எதிர்பார்ப்புக்கள்
ஆசைகள்...ஆதங்கங்கள்
 
நிறைவேறாத காதலுடன்,
உன் நினைவுகளுடன்
என் உயிரும், நாம் சேர்வோம்
என்ற நம்பிக்கைகளும்
கொஞ்சம் கொஞ்சமாய்
என் உடலை விட்டு பிரிகின்றன
இதற்கா நீ ஆசை கொண்டு
காதலித்து ஏமாற்றினாய்...

Get this gadget at facebook popup like box