இந்திய மண்ணில்
இளவரசா....
நிந்தனுக்கு இக்கதியோ?
பாரதிதாசனும் இல்லை
பாதகர் நிலை பாடிடவே...
அன்பினால் இணைந்து
இன்புற்ற நும்மை
பிரித்தது போதாதென்று
குடித்தனரோ உனதுயிரை?
சூழ்ச்சியால் உனைக்கொன்று
அவலையாய் ஆக்கினரோ?
ஆசையாய் நீயரவணைத்த
திவ்வியாவைத் தானுமின்று...
சாதி வெறி கொண்ட
சண்டாளர் செயலினால்
நீதித்தாயும் மௌனமாய்
நின்றாளோ பாரதத்தில்?
நீ கொண்ட காதல்
நிஜமானது
அதனால்.....
உங்கள் காதலிற்காய்
தலை தாழ்த்திய வண்ணம்
உலகம் வசைபாடும்
கொலைகாரப் பாதகர்களை.....
No comments:
Post a Comment