சாகுமா காதல்? ??

ஊர் விட்டோடி நீயும் பேர் கெட்டு போனபின்...

ஊர் விட்டோடி நீயும்
பேர் கெட்டு போனபின்
வேர்விட்ட உன் காதல்
விழுதுகள் விட முன்னரே
வேரோடு சாய்ந்ததேன்?...தூய்மையான காதல் கொண்ட
தூயவன்தான் இளவரசன்
கரமது பற்றி கலந்திட்ட வாழ்வில்
கனத்ததோ இனவெறி அங்கே
கலைந்ததோ உன் காதல்?...

தூக்கில் தொங்கிய தந்தையும்
தோற்றுவிட்டார் தன் வாழ்வில்
வேற்றுச் சாதி என்பதனால்
வெந்து நொந்து போனவர்
கண்டதுதான் என்னவோ?... - திவ்யா

அன்பினால் இணைந்த உம்மை
ஆப்புக்கொண்டு பிளந்தனரோ?...
இன்புற்றிருக்க வேண்டாது
ஈனர்கள் கொண்ட வெறியால்
ஈந்தான் இன்னுயிரை காதலுக்காய் - இளவரசன்

பாட்டுடைத் தலைவன்
பாரதி வாழ்ந்த நாட்டில்
ஏட்டுடைக் கல்விக்கே
வேட்டு வைத்தனர்
வீணர்கள் இன்று.....

புதுமைப் பெண்ணவளாய்
புதுமைகள் படைத்திட
புறப்பட்ட நீயும்
பண்பட்ட காதலை
பாழாக்கியதும் ஏனோ?.....

-சுக்ரன்-

No comments:

Get this gadget at facebook popup like box