என்னை அழவைத்த பெண்ணே உன்னை அள்ளியனைக்க துடிக்குது என்கரம்!

உன் நினைவுக் கீற்றுக்கள்-என்
மனதில் புயலாக -எழுகிறது
இருந்தாலும்-என்னை
அழவைத்து அழவைத்து-என்னை,
ஏன் துடியாய் -துடிக்கவைக்கிறாய்
உன் நினைவுகள்-என் மனக்கதவுகளில்
பூட்டப்பட வில்லை
எப்போதும் திறக்கப்பட்டிருக்கிறது,
ஆனால் உன்மனதில்,
என் நினைவுகதவுகள்,
பூட்டப்பட்டது -ஏன்
சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே,
 
சில நேரங்களில்- உன்னை
என் மனக்கதவுகள் நினைக்க-மறுத்தாலும்,
நான் கை பிடித்து எழுதும்-பேனா
கண்ணீர் துளியை -விட்டு விட்டு
உன் ஞாபக அலைகளை
காகிதத்தை-நனைக்க வைக்குது,
நான் உனக்காக,
காதல் மடல் எழுதமறுத்தாலும்,
அந்த பேனா -மறக்கமாட்டாது,
அது எப்போதும் உன்-நினைவுக்
காற்றை வீசிக் கொன்டே -இருக்கும்,
ஏன் பெண்ணே -என்னை,
அழவைத்து அழவைத்து,
அழகு பார்கிறாய்,
இது உனக்கு -அழகா,
சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே
 
சிலமாதங்கள் சில வருடங்கள்
கடந்த நிலையில்
என் மனதுக்குள் காதல் -என்னும்
பாச உணர்வை -நீ சுவைக்க வைத்துவிட்டாய்,
நீ என்னை அழவைத்த -ஒவ்வொரு நிமிடங்களில்,
என் மனதுக்குள் புயல் அடித்தது,
என் மன உணர்வுகள் -மரணத்தில் சாய்ந்தது
நிலவு கூட தேய்ந்து-சில
நாட்களில் அது-முழுமை பெறும்
ஆனால்என்னை அழவைத்துவிட்டாய்-பெண்ணே
உன்னை அள்ளியணைக்க
என்கரம் -தழுவுதே,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

No comments:


Get this gadget at facebook popup like box