கொல்லாதே என்னைக் கொல்லாதே………….

இதயமே…….. இதயமே……..
என்னை ஏன் கொல்லுகிறாய்
ஆயிரம் பூக்கள் என் மீது
விழுகிறது-அந்த பூக்களை
தூக்கி எறிந்து விட்டு-நீதானே
என் இதயத்தில் சூடும் மலராக
நான் நினைக்கிறேன்
நீ ஏன் முற்களாய் குத்துகிறாய்
 

ஒவ்வொரு நிமிடமும்-
உன் நினைவுதான்
காதலின் நினைவையும்
வேதனையில் வடித்த கண்ணீரின்
நினைவையும் என் இதயம்
சுமந்து வருகிறது,-அதை நீ அறிவாயா?
உன்னோடிருந்த நிமிடங்களை
நினைத்து நினைத்து திரும்பி பார்கையில்
என்வீட்டு சுவர்க்கடிகாரம்
அந்த நாளிகை காட்டுகையில்
அதை மறக்க முடியவில்லையடி………
 
நான்கு(4) வருடங்கள் பார்த்து பார்த்து
உன் முகம் என் நெஞ்சுக் குழிக்குள்
புதைந்து கிடக்கிறது…………………..
நாளுக்கு நாளாய் ஆண்டுக்கு ஆண்டாய்
பார்த்து பார்த்து வளர்ந்த காதல்
வெறும் பேச்சில் முறிந்து போனதடி……..
நீ பிரிந்தாலும் நீ சேர்ந்தாலும்
உன்நினைவு எப்போதும்
என் இதயம் சுமந்த வண்ணம் இருக்கும்………
 
என் தூரிகை உதடுகளால்
கண் இமைக்காமல் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
தாஜ் மஹால் ஓவியமாய் இருக்குதடி
என்றாவது ஒரு நாள்-நான்
ஏன்பிரிந்தேன் என்று-நீ
எப்படி தெரிந்து கொள்வாயே
அப்போதுதான் நான் -இருப்பேன் உனக்காக
எனது வாழ்வில் விடியல் மலர
உனது துணை-தேடுது,………………..
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

No comments:

Get this gadget at facebook popup like box