காதல் முறிவின்போது சந்திக்கக்கூடிய 7 கட்டங்கள்...!

முற்காலத்தை போல் இல்லாமல், இப்போதெல்லாம் சின்ன சின்ன காரணங்களால் கூட உறவுகள் முறிகிறது. பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி, பொறுமை என்பது துளியும் இருப்பதில்லை.
எவ்வளவு வேகத்தில் காதலிக்க தொடங்குகிறார்களோ ஆவளவு சீக்கிரத்தில் பிரியவும் செய்கிறார்கள். பொதுவாக காதல் தோல்வி என்றால் ஆண்கள் தேவதாசை போல் திரிவார்கள் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் உறவு முறியும் கட்டத்தில் இருந்து, படிப்படியான அவர்களின் பரிமாணங்கள் எப்படி அமைகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உறவு முறிதலை கையாளுவதென்றால் ஆண்கள் ஆடி தான் போவார்கள். இதற்கு முன் பல உறவுகள் முறிந்திருந்தாலும் கூட, இனி பல உறவுகள் முறியப்போகிறது என்றாலும் கூட, தற்போதைய உறவு முறிகிறது என்றால் மரணத்தை தழுவும் உணர்வு உண்டாகவே செய்யும். சரி உறவு முறிதலின் போது ஒருவர் கடந்து செல்லும் 8 கட்டங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.


அதிர்ச்சி 


நீங்கள் உங்கள் தந்தூரி சிக்கனை மும்முரமாக சுவைத்துக் கொண்டிருக்கும் போது , உங்கள் காதலி "எல்லாம் முடிந்து விட்டது" என்று கூறினால் அது உங்கள் காதில் விழப்போவதில்லை. அதற்கு காரணம் தேவாமிர்தமாக இருக்கும் உணவு இன்னும் உங்கள் தட்டில் தீரவில்லை. வேறு வழியின்றி அவர் உங்களை தட்டி அழைக்க வேண்டியிருக்கும். இப்போது அதையே சத்தமாக மீண்டும் கூறி விட்டு எழுந்து சென்று விட்டால், நீங்கள் அவரையே வெறித்து போய் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.


மறுத்தல் 


"எல்லாம் முடிந்து விட்டதா? கண்டிப்பாக இல்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் சிறிது நேரம் தனிமையே. அவள் மீண்டும் வருவாள், கண்டிப்பாக மீண்டும் வருவாள். ஒரு வேளை வராமல் போய் விட்டால்?" இப்படி எல்லாம் உங்களுக்குள் நீங்களே கேட்டு கொண்டிருப்பீர்கள். அவளுக்கு மெசேஜ் அனுப்பி, அதற்கு அவள் கண்டிப்பாக பதிலளிப்பாள் என்று மனதை தேற்றிக் கொண்டு மணிகணக்கில் காத்திருப்பீர்கள்.


தனிமையாக்கம் 


அவள் உங்கள் பக்கம் திரும்பவே இல்லையா? உலகமே இருண்டு போய், ஜெமினி கணேசன் பைஜாமாவுடன் ஒரு மாத காலத்திற்கு துக்கத்துடன் அலைவீர்கள். உங்கள் கைப்பேசியையும் பிரிந்திருப்பீர்கள். யாரிடமாவது பேசி 50 வருடங்களுக்கு மேலான உணர்வை ஏற்படுத்தும்.



தீவிர தேவை 


அவளுடன் உறவில் இருந்த போது அவள் மீது உண்மையான அக்கறையுடன் இருந்திருக்க மாட்டீர்கள். ஆனால் இப்போது அவள் போனவுடன், எப்படி உதய் சோப்ராவுக்கு ஒரு பிளாஸ்டிக் சர்ஜெனின் தேவை தீவிரமாக தேவைப்படுகிறதோ, அதே போல் தான் உங்களுக்கும் அவள் தேவைப்படுவாள். ஆவலுடன் மீண்டும் உறவை புதுபிக்க உங்களால் ஆனதை செய்வீர்கள். எப்படி ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் இனி ஏமாற்று வேளையில் ஈடுபட மாட்டேன் என வாக்குறுதி கொடுக்கிறானோ, அதே போல் நீங்களும் இனி நல்ல துணைவனாக இருப்பீர்கள் என்று உங்கள் காதலிக்கு வாக்குறுதி அளிப்பீர்கள்.



கோபம் 



திடீரென அவளால் நீங்கள் கழட்டி விடப்பட்டிருக்கலாம். அவளை நினைக்கும் போதெல்லாம் உங்கள் இரத்தம் கொதிப்படையும். இப்படி ஒரு பைத்தியகாரியை காதலித்து விட்டோமே என்று உங்களை நீங்களே கடிந்து கொள்வீர்கள். "அவ முடிய பாரு! அழுக்கு பிடிச்ச துடைப்பக் கட்டை போல இருக்கு. அவளை காதலிக்க தொடங்கிய போது நான் எந்த உலகத்தில இருந்தேன்", என்றெல்லாம் யோசிப்பீர்கள். இப்படியெல்லாம் தோன்றியால் அவள் மீது இருந்த காதல் உங்களை விட்டு சென்றுவிட்டது என்று அர்த்தம்.


துயரம் 


நீங்கள் அவளை காதலித்தீர்கள். இப்போதும் காதலிக்கிறீர்கள். எங்கே பார்த்தாலும் அவள் முகம் தான் உங்களுக்கு தெரிகிறது. அவள் இல்லாத வாழ்க்கை அர்த்தமில்லாமல் தெரியும். அவள் இல்லாமல் எப்போதுமே சந்தோஷம் இருக்காது. இந்த உலகத்தில் உள்ள அசிங்கமான பிறவி நீங்கள் தான் என்று எண்ணத் தோன்றும். கொசுக்கள் கூட உங்களை விட்டு போகிற மாதிரி தெரியும். படத்தில் காட்டுவதை போல் புகைப்பிடித்தும் குடித்தும் கூட சோகத்தை ஆற்ற முடியாமல் போகலாம்.


திரும்ப மீள்வது 


இவள் போனால் என்ன? கடலில் ஆயிரக்கணக்கான மீன்கள் இல்லையா என்ன? ஒரு வழியாக உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியே வருவீர்கள், என்ன வருடம் தான் 2050-ஐ தொட்டிருக்கும். அருகில் இருக்கும் க்ளப்பிற்கு சென்று வெட்கமே இல்லாமல் பெண்களை உரசுவீர்கள். பல பெண்களை உரசிய பின்பு தான் உங்களுக்கு புரியும் நீங்கள் மீண்டு எழுந்து விட்டர்கள் என்று.

No comments:


Get this gadget at facebook popup like box