எதிர்கால கணவரை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய குணங்கள்..!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது வருங்கால கணவரைப் பற்றி கனவுகள் இருக்கும்.
அவர் அழகாகவும் மற்றும் பணம் உடையவராகவும் மற்றும் பளிச்சென்றும் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் இது மட்டும் திருமணம் கிடையாது. இதற்கும் மேல் பல முக்கியமான விஷயங்கள் திருமணத்தில் உள்ளது.

ஒரு ஆண் பார்ப்பதற்கு ஒழுக்கமாக இருக்கலாம். ஆனால் அவர்களது குணம் நமக்கு தெரியாது. அனைத்து ஆண்களும் கெட்டவர்கள் அல்ல ஆனால் அவர்களில் கெட்டவர்கள் உள்ளனர். ஆகையால் நமக்கு வரப் போகும் கணவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றி நாம் முன்பே தெரிந்து கொண்டு அந்த குணமுள்ளவர்களை கணவராக தேர்ந்தெடுப்பது அவசியம்.


அறநெறிகள் உள்ளவர்


முதலில் உங்கள் ஆணிடம் சிறந்த அறநெறிகளை கடைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கிய குணமாகும். இந்த குணம் உள்ளவர்கள் கண்டிப்பாக எது நல்லது எது கெட்டது என்று அறிந்தவர்களாக இருப்பார்கள். இதனால் அவர் எந்த கெட்ட பழக்கத்தையும் கொண்டுள்ளவராக இருக்க முடியாது. நீங்கள் அவரை முழுமையாக நம்பலாம். இந்த குணம் இருந்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு கணவராக ஆகும் தகுதி உண்டு.


அவர் குடும்பத்தோடு எவ்வளவு அன்பாக இருக்கின்றார்


அவரது குடும்பத்துடன் அவருக்கு உள்ள உறவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நல்ல கணவரை கண்டறிவது எளிதான காரியம் கிடையாது. இதை சறிது கடினப்பட்டு தான் கண்டறிய வேண்டும். அவரது குடும்பத்துடன் அவர் அன்பாகவும் பாசமாகவும் இருப்பவராக இருந்தால் உங்கள் மீதும் இப்படி இருக்க வாய்ப்புகள் அதிகம். கணவரை தேர்ந்தெடுக்க பல குணங்களை நாம் அலசும் போது இது ஒன்று போதும் அவரை சிறந்த ஆண் என்று கூறுவதற்கு. இந்த ஒரு குணத்தை கொண்டு ஒரு ஆண் எப்படிப்பட்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.


திருமணத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்வது


அவர் திருமணத்தின் உண்மையான அர்த்தம் தெரிந்தவராக இருந்தால் அப்படிப் பட்ட நபரையும் நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்ள முடியும். ஒரு வேளை அவர் மிகுந்த கட்டாயத்தின் காரணமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது. திருமணத்திற்கு என்று ஒரு புனிதம் உள்ளது அதை அறிந்தவராய் இருப்பது அவசியம். குடும்பத்தை பாhத்துக் கொள்வது மற்றும் செலவுகளை சமாளிப்பது, அனைவர் மேலும் அன்பு செலுத்தி ஏற்றுக் கொள்வது ஆகிய காரியங்களை புரிந்து நடந்து கொள்பவராய் இருப்பதும் அவசியம்.


உறவில் உறுதியாக இருப்பது


மிகவும் முக்கியமான குணமாக இது கருதப்படுகின்றது. உறவில் உறுதியாக இருப்பது என்பது எந்த விதத்திலும் வாழ்நாள் முழுதும் ஒன்றாக வாழ்வாவரா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரது குடும்பத்துடன் இருக்கும் உறவை ஆராய்ந்து பாருங்கள். இது உங்களுடன் அவர் எப்போதும் இருப்பாரா என்பதன் விடையை உங்களுக்குத் தரும். ஒரு நல்ல கணவரை தேர்ந்தெடுத்த மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வருங்கால கணவரிடம் இந்த பொறுப்பு உள்ளதா என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.


உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் மதிப்பது


உங்களுக்கு கணவராக வரும் நபர் உங்களையும் மற்றும் உங்களை சார்ந்த குடும்பத்தையும் மதிக்க வேண்டும். ஒரு வேளை அவர் உங்களது பெண்மையை மதிப்பவராக இல்லாவிட்டால் அவருடன் வாழ்வதில் அர்த்தம் கிடையாது. ஒரு நல்ல கணவரை தேர்ந்தெடுப்பது உங்கள் வாழ்கையின் ஒரு சிறந்த அனுபவமாக அமைகின்றது. வருங்கால கணவரிடம் தன்னலமின்மை, உண்மையாக இருத்தல் மற்றும் மிகுந்த அக்கறையுடன் வாழுதல் ஆகிய பண்புகளை கெண்டிருப்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். இப்படிப்பட்ட கணவர் அமைந்தால் உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.

No comments:


Get this gadget at facebook popup like box