உள்­ளத்தின் அழகில் மலர்ந்த காதல் !

''எனது காத­ல­ர் உலகி­லேயே அரி­தாக ஏற்­ப­டக்­கூ­டிய உடல் பாதிப்­பொன்­றுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கலாம். ஆனால் நாங்கள் இயல்­பான ஜோடி­க­ளா­கவே வாழ்­கிறோம்’’ என தோலின் கீழ் கொழுப்பை சேமிக்க முடி­யாத விநோத உடல் பாதிப்­புக்­குள்­ளான பிரித்­தா­னிய சைக்­கி­ளோட்ட வீரர் ஒரு­வரின் காதலி தெரி­வித்தார்.

டொம் ஸ்டனிபோர்ட் (24 வயது) என்ற மேற்­படி இளை­ஞ­ருக்கு அவ­ரது 12 ஆவது வய­தி­லி­ருந்து தோலில் கொழுப்பை சேமிக்க முடி­யாத பாதிப்பு ஏற்­பட்­டது.

எனினும் மனம் தள­ராத டொம் ஸ்­ட­னிபோர்ட், சைக்­கி­ளோட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வதில் தனது கவ­னத்தை திசை திருப்­பினார்.

இந்­நி­லையில் அவ­ருக்கு இணை­யத்­த­ளத்தில் எது­வித உடல் பாதிப்பும் இல்­லாத அலைஸ் மில்லர் என்ற 23 வயது யுவதி அறி­மு­க­மானார்.

ஸ்டனி­போர்ட்டின் தள­ராத மனத்தால் கவ­ரப்­பட்டு தீவிர காதல் கொண்ட அலைஸ் மில்லர், தற்­போது ஸ்டனி­போர்ட்­டுடன் லண்­டனில் வசித்து வரு­கிறார்.

‘‘நான் அவரை முதன் முத­லாக நேரில் சந்­தித்­த­போது அவ­ரது விசித்­தி­ர­மான தோற்றம் எனக்கு கவலை தந்­தது. ஆனால் அவ­ரது நட்­பு­ற­வான உரை­யா­டலும் அவர் பழகும் விதமும் எனக்கு அவர் மீதான காதலை தீவி­ரப்­ப­டுத்­தின'' என அலைஸ் கூறினார். டொம் ஸ்டனிபோர்ட் சரா­சரி மனி­தர்­களில் காணப்­ப­டு­வ­துடன் ஒப்­பி­டு­கையில் 40 சத­வீ­த­ச­தைப்­ப­கு­தி­யையே கொண்­டுள்ளார்.



உலகில் 'எம்.டி.பி.' நோய் அறிகுறி என்றழைக்கப்படும் இத்த கைய பாதிப்புக்குள் ளான 8 பேரில் டொம் ஸ்டனி போர்ட்டும் ஒருவராவார்.

No comments:


Get this gadget at facebook popup like box