வாழ்க்கைத் துணையிடம் தவறாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

காதல் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க வேண்டுமெனில், அந்த உறவில் இருக்க வேண்டியது என்னவென்று திருமணமானவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதே சமயம் ஒருசிலவற்றில் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்.


இவை இரண்டுமே காதல் செய்பவர்களுக்கிடையே இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று. இதனை சரியாக பின்பற்றினால், காதல் வாழ்க்கை நிச்சயம் சந்தோஷமாக இருக்கும்.

காதல் எப்பது ஒரு தனித்துவமான உணர்வோ, அதேப் போல் அந்த உறவில் நல்ல நட்பும் இருக்க வேண்டும். அதே சமயம் சிலருக்கு இரகசியம் என்ற ஒன்று இருக்கும். அதையும் எப்போதும் துணையிடம் துருவித் துருவி கேட்கக்கூடாது. மேலும் காதல் என்று வந்தால், நிச்சயம் அதில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை. ஆகவே அவ்வாறு எதிர்பார்க்கும் போது அதை சொல்ல வேண்டும். இதுப்போன்று நிறைய விஷயங்கள் உள்ளன.

இப்போது அப்படி வாழ்க்கைத் துணையிடம் தவறாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா!!!

காதல் செய்யும் போது, முதலில் காதலிப்பவரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் காதல் நல்ல ஆரோக்கியமான காதலாக இருக்க வேண்டுமெனில், நிச்சயம் அதில் சிறு இடைவெளி இருக்க வேண்டும். இவ்வாறு சரியான இடைவெளியை பின்பற்றி வந்தால், அந்த காதல் நீண்ட நாட்கள் இருக்கும். ஆகவே போதிய இடைவெளி இல்லாவிட்டால், அதைப் பற்றி துணையிடம் நன்கு தெளிவாக பேச வேண்டும்.

பெரும்பாலான காதலர்களுக்குள் பிரிவு ஏற்படுவதற்கு பணம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே இருவரும் வரவு செலவுகளைப் பகிர்ந்து கொண்டால், அந்த காதல் நன்கு வலிமையோடு இருக்கும்.

சிலருக்கு அதிக வேலைப்பளுவின் காரணமாக, மனதில் கஷ்டம் அல்லது ஒருவித அழுத்தம் ஏற்படும். அப்படி மன கஷ்டம் இருக்கும் போது, அதனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொண்டால், இருவருக்குள் இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

இருவரும் பிடித்தது மற்றும் பிடிக்காததைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டால், இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் இந்த மாதிரியான பேச்சு, காதலை இன்னும் வலுவானதாக மாற்றும்.

படுக்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனைப் பற்றி தெளிவாக பேச வேண்டும். இதனால் காதல் வாழ்க்கை இனிமையாகி, அன்பு அதிகமாகும்.

யாராலும் மற்றவர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. ஆகவே நீங்கள் எதிர்பார்ப்பதை, துணையிடம் வெளிப்படையாக சொன்னால், அதை அவர்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் இனிமேல் நடந்து கொள்வார்கள். குறிப்பாக, எதிர்பார்ப்புக்களிலும் ஒரு எல்லை உள்ளது. அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது வாழ்க்கையை சீரழிக்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை சந்திக்கலாம். அதில் சிலர் நன்கு பழகுவார்கள். ஆகவே அப்படி நன்கு பழகும் ஏதேனும் புதிய நண்பர்கள் கிடைத்தால், அதைப் பற்றி இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி, அதுவே பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

காதலில் எப்போதும் இருவரைப் பற்றி பேசாமல், துணையின் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிப்பது, அந்த காதலை இன்னும் வலுவாக்கும். மேலும் இவ்வாறு குடும்பத்தைப் பற்றி பேசும் போது, எதிர்காலத்தில் அவர்களை சந்திக்கும் போது, அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது நன்கு தெரியும்.

1 comment:

karthik said...

this is such a nice and useful information for us...i appreciate urs word Free Blogger premium Themes

Get this gadget at facebook popup like box