சிந்தி விடாதே !

டி என்னவளே ! -உன்

கருவிழி மேகங்கள்

கண்ணுக்குள் மோதிக்கொண்டு

கருங்குளத்து நீர்

கன்னங்களில் வழியும் பொது - என்

 

தயக் குளத்தின்

செந்நீர் சிதறி

சாலையில் ஓடுதடி- என்னை

சோகத்தில் வாட்டுதடி.


ழிகின்ற நீர் - உன்

வாய்க் கமலத்தில்

வடிந்து விட்டால் - நீ

மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என் 

 

தயத்தின் நீரெல்லாம் 

ஓட மறுத்து

ஒரு நிமிடம் உறைந்து

உன் அழகை ரசிக்குதடி

உன்னை முத்தமிட துடிக்குதடிண்கள் தான் காதலின் பிறப்பிடம்

கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்

கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்

நான் சொல்கிறேன்.சிந்தி விடாதே - என் செல்லமே !

கண்ணீரை மட்டுமல்ல - என்

காதலையும் தான்.    
 
-சத்தியசீலன்

No comments:

Get this gadget at facebook popup like box